முன்னாள் போராளிகள் மூவர் புனர்வாழ்வின் பின் விடுவிப்பு

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் புனர்வாழ்வு பெற்றுவந்த மூன்று முன்னாள் போராளிகளை அவர்களது குடும்பத்தாருடன் இணைத்து வைக்கும் நிகழ்வு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கெப்டன் குணசேகர தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடந்த ஒருவருடம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த யாழ்பாணத்தைச் சேர்ந்த மார்க்கண்டு நேவிநாதன், கிளிநொச்சியை சேர்ந்த ஆறுமுகம் அருள்பிரகாஷ் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த பெர்னாண்டோ எமில்தாஸ் ஆகிய மூன்று முன்னாள் போராளிகளும் இன்று அவர்களின் குடும்பத்தினரிடம் சமூகமயமாக்கிவைக்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் சர்வ சமயத்தலைவர்கள், புனர்வாழ்வு ஆணையாளர் நாயக்கப்பணிமனையின் அதிகாரி கேணல் அஷாட் இசைடீன், கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டத்தின் பின் இணைப்பு அதிகாரிகள், பூந்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வன்னி விமானப்படையின் நிலையப் பொறுப்பதிகாரி, முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.