முன்னாள் போராளிக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பளித்தது வவுனியா நீதிமன்றம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பலவந்தமாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் போராளி ஒருவருக்கு வவுனியா நீதிமன்றம் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக இருந்த கண்ணதாசனுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆயுட்காலச் சிறைத் தண்டனைவழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் போராளியான கண்ணதாசன் புனர்வாழ்வு பெற்று விடுதலையானவர். இவர் மீது பெண்ணொருவர் தனது பிள்ளையை பலவந்தமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தார் என வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வவுனியாமேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது பலவந்தமாக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டமைக்காக கண்ணதாசனுக்கு நீதிமன்றம் ஆயுட் தண்டனை தீர்ப்பு வழங்கியது.