முள்ளிவாய்க்கால் முடிவல்ல…

சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடத்திய மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் உட்பட 17 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைப்பு

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது மேலும் கடற்கரையில் கூடினாலோ அல்லது ஏதேனும் கூட்டம் நடத்தினாலோ உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்து. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் சமூகநீதி போராளி தி.வேல்முருகன் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ,இயக்குனர் கவுதமன் , உட்பட 281பேர் மெரினா கடற்கரையில் பேரனியாக செல்ல முயன்ற போது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இதில் மே17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உட்பட 17 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.பேருந்து கண்ணாடிகள் ஒடைக்கப்பட்டதாகவும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கு, காவல்துறை தடையை மீறியவை குறிப்பிட்டவை

பின்பு இராயப்பேட்டை மருத்துவமனையில் மருத்துவ சோதனை முடித்த பிறகு. மெரினா கடற்கரை காவல் நிலையம் டி- 5 கொண்டு செல்லப்பட்டனர்

பிறகு இரவு இரண்டு மணிக்கு இராயபுரத்தில் உள்ள எழும்பூர் 14 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர் படுத்தபட்டனர்.

17 பேரிடம் விசாரித்த நீதிபதி ஒருவார காலம் 29 வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டார். இவர்களுக்கான ஜாமீன் மனுவை 23ம் தேதி விசாரிக்க உத்தரவிட்டார். பிறகு 3 மணிக்கு அங்கு இருந்து 17 பேரை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்

வழக்கறினர் விவேக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…

அமைதியாக அஞ்சலி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

இவர்களுடைய ஜாமீன் மனுவை 23ம் தேதி விசாரிக்க உத்தரவிட்டார்