முஸ்லிம் மக்கள் பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு…!

பி. பி.சி செய்தி ஊடகத்திற்கு தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் பேட்டி.

கேள்வி:
முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:
முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடுடைய ஓர் இனக்குழு என்றவகையில் அவர்களது பிரச்சினை அணுகப்படவேண்டும்.முஸ்லிம் மக்களின் தனித்துவம்,நில உரிமைப்பாடு பேணப்படும்.அதேவேளை அவர்கள் தமிழ்மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக,அரசியல்,பொருளாதார வாழ்வைச் சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம்.சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும் விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள்.இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிக்கடா ஆகக்கூடாது.

கேள்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் முஸ்லிம் மக்களை வெளியேற்றினீர்கள்?அவர்களும் யாழ்ப்பாண மக்கள்தானே?
பதில்:
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து பெரும் தொகையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது.அந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம்.ஆயினும் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்.