மைத்திரி, ரணிலால் முடியாமல் போனது: விஜயால் முடிந்தது
இலங்கையில் அதிகம் தேடப்பட்டவர் நடிகர் விஜய்!
தேடல் பொறியில் முன்னணி இடத்தை வகிக்கும் கூகில் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விபரங்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஆண்டில் (2015) அதிகம் தேடப்பட்ட பிரசித்தபெற்றவர்கள் குறித்த தகவல்களை கூகில் வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தேடப்பட்டவர்களில் உலகளாவிய ரீதியில் ஆர்ஜன்டீன கால்பந்து வீரர் லயனல் மெர்சி மற்றும் ஹொலிவுட் நடிகை கிம் கடேர்சியன் ஆகியோரே தேடப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தலா 26 நாடுகளில் அதிகம் தேடப்பட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழக சினிமா நடிகர் விஜய் அதிகம் தேடப்பட்ட நபராக இடம்பிடித்துள்ளார். இலங்கையில் சிங்கள இரசிகர்கள் மத்தியிலும் தமிழக நடிகர் பிரசித்திபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்களவரகளிடம் பெரும் அதிர்ச்சி மற்றும் பொறாமை
சிங்கள உப தலைப்புக்களுடன் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களில் விஜயின் படத்தை சிங்களவர்கள் அதிகம் விருப்பிப் பார்ப்பதுண்டு. சிங்களவர்கள் ஹிந்தி திரைப்படங்களை அதிகமாக விருப்பிப் பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.
(www.eelamalar.com)