யாருடனும் கூட்டு இல்லை! சைக்கிள் சின்னத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிகளுடனும் கூட்டுச் சேர தாம் தயாரில்லை எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது கட்சி சாவகச்சேரி நகரசபைக்கென கட்டுப்பணத்தையும் இன்று செலுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.