யார் மஹிந்தவை ஆட்சிக்குகொண்டுவர விரும்புகின்றனர் என்பது இப்போது புரியும் – கஜேந்திரகுமார்

மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவதாக கூட்டமைப்பினர் எம்மீது பிரச்சாரங்களை செய்துவந்தனர். ஆனால் மஹிந்த ஓடோடிப்போய் சம்பந்தரை நலம் விசாரித்தது ஏன் என தெரியவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் தொடர்பான ஊடகவியலாளர்களிற்கான அறிமுகக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் “சம்பந்தரை மஹிந்த தன் மகன் சகிதம் சென்று நலன்விசாரித்திருக்கின்றார். ஆனால் உங்களைதானே மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கொண்டுவர பாடுபடும் கட்சி என்று கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்கின்றனர்?“ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அதுதான் தனக்கும் புரியவில்லையென்றார்.