ரஜினியை வெளுத்து வாங்கிய சீமான்!
ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவது உறுதி என பலரும் பேசி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் எனவும், ரஜினி வந்தால் என்னென்ன செய்வேன் என்று சொல்கிறாரோ அதனை தாங்களே செய்து கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், 44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்வதால் தான் பச்சை தமிழன் என ரஜினி கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீமான், நீண்ட காலமாக மகாராஷ்டிரத்தில் வாழும் தமிழர்கள் மராட்டியர்கள் ஆகி விடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைத்துறையினர் இங்கு வந்து நடித்து விட்டும், சம்பாதித்து விட்டு போகட்டும் எனவும், நாட்டை ஆளும் உரிமை தனக்கே உள்ளது எனவும் சீமான் கூறியுள்ளார்.
இனியும் அடிமையாக வாழ முடியாது எனவும், தமிழகத்தின் வரலாறு தெரியாதவர்கள் தமிழகத்தின் அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் சீமான் ரஜினியை பற்றி ஆவேசமாக கூறியுள்ளார்.