ரஜினி அரசியலுக்கு வர தேவையில்லை –சீமான்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை என தஞ்சையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என யாரும் விரும்பவில்லை. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது நாம் பயத்தில் காலை தூக்கி விடுவோம். ஆனால் பட்டாசு புஸ் என ஆகி விடும்.

அது போல் தான் ரஜனி அரசியலுக்கு வந்தால் புஸ்வானமாகி விடும். அவர் அரசியலுக்கு வந்தால் எல்லா அரசியல் வாதி போல் தான் இருப்பார். அவர்கள் செய்வதை போல் தான் செய்வார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி தான் மறைமுகமாக நடக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆட்சியை எதிர்பார்க்கவில்லை.காமராஜர், கக்கன், சிங்காரவேலு போன்றவர்கள் ஆட்சியை தான் எதிர்பார்க்கிறோம். தி.மு.க. ஆட்சியின் போது குளத்தை தூர்வாராமல் தற்போது மு.க.ஸ்டாலின் குளத்தை தூர்வாரி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.