ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப் படுத்தப்பட்டேன் – பன்னீர் செல்வம்

சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் 07.02.17 இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதா நினைவிடம் முன்பு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தார்.
சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இந்த தியானம் நீடித்தது.
இதனால் மெரீனாவில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் , செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தகுதியுள்ள யாரை வேண்டுமென்றாலும் முதல்வராக நியமிக்கலாம்.
அது நானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கட்சியை பாதுகாக்க தன்னந்தனியாக போராடுவேன்” என்றார்.