லண்டன் ஹாரோ பிராந்தியத்துக்கான ஒருங்கிணைப்பாளராக மிக சிறப்பாக செயற்பட்ட ஈழத்தமிழர் குணரட்ணம் சுரேஸ்.
கடந்த மே மாதம் பிரித்தானியா பிரதமர் அவர்களால் அறிமுகபடுத்தப்பட்ட keep Britain Tidy Great Plastic Pickup Event 2018 என்னும் செயற்த்திட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூக நலமும் அமைச்சு தன்னையும் இணைத்து கொண்டது.
நாடுகடந்த தமிழீழ அரசங்கம் இச்செயற்திட்டத்தில் ரமேஸ்குமார் சோமசுந்தரம் என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களையும் உள்ளடக்கி சிறப்பாக செயற்பட்டது. அதற்கமைய ஹாரோ பிராந்தியத்துக்கான ஒருங்கிணைப்பாளராக மிக சிறப்பாக செயற்பட்ட ஈழத்தமிழர் குணரட்ணம் சுரேஸ்.
ஹாரோ மாநகரசபையினால் வருடாந்தம் நடாத்தப்படும் harrow’s Heroes Awards எனும் விருது வழங்கும் நிகழ்வில் வரலாற்றில் முதல் முறையாக ஈழத்தமிழன் குணரட்ணம் சுரேஸ் தெரிவு செய்யப்பட்டு இறுதிச்சுற்று நால்வர் வரை சென்றமை பாராட்டிக்குரியது. அவரது சேவை தொடர்வதற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.