லீமா…

தேசிய தலைவர் அவர்கள் ஒரு இராணுவ முகாமை தாக்கியழிப்பது என்று முடிவு எடுத்துவிட்டபிறகு உளவு தரவுகளின் அடிப்படையில் தாக்குதல் திட்டத்தை வரைந்து அதை செயல்படுத்த தாக்குதல் திட்டத்தை தளபதிமார்களுக்கு விளக்கி சொல்லுவார்.
தாக்குதல் தொடங்கியபிறகு எதிரி எவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ளுவான்.அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்.அம்முகாமில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை அங்குள்ள ஆயுதங்கள் என்னென்ன,முகாமுக்கு எந்தெந்த வழிகளில் சப்ளை வரும்.தாக்குதல் முயற்சி வெற்றியளிக்க வில்லையெனில் அல்லது பின்னடைவை சந்திக்கிறது எனில் எதிரியை இழப்புகளின்றி அல்லது குறைவான இழப்புகளுடன் எவ்வாறு பின்தளத்திற்கு நகர வேண்டும் இப்டியான அனைத்து தரவுகளும் தேசியதலைவரால் விவாதிகபட்டு,உறுதிசெய்பட்டபின்னர் தாக்குதல் திட்டம் இறுதிவடிவம் பெறும். பின்னார்தான் தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்குவது வழமை.
அப்படியான தாக்குதல் தொடங்கி சண்டை நடக்கும்போது திட்டமிட்டபடி ஏற்கனவே விவாதிக்கபட்டதுபோல தலைவர் கணித்தது போலவே எதிரியின் நடவடிக்கையும் இருக்குமாயின் பெரும்பாலும் தாக்குதல் திட்டம் வெற்றியிலையே முடியும்.காரணம் அனைத்தும் பக்கங்களிலிருந்தும் உன்னிப்பாக பாரதூரங்களை அலசி ஆராய்ந்துதான் திட்டம் திட்டபடும்.தேசியதலைவர் மிகதுல்லியமாக கணித்தன்படி எதிரியின் நடவடிக்கைகளும் தேசியதலைவரின் வழிகாட்டுதலின்படி தாக்குதல் நடவடிக்கையும் முன்னெடுக்கபட்டால் வெற்றி நிச்சயம்.
ஆனால்
சண்டை இருதரப்பும் உக்கிரமாக நடந்துகொண்டிருக்கும் போது களமுனைகளில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுவதுண்டு,இயக்கம் கணித்தது போலில்லாமல் மாற்று திட்டங்களையும் எதிரி முன்னெடுப்பதுண்டு அது போராளிகளுக்கு களமுனையில் பரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியதும் உண்டு.அவ்வாறான சூழ்நிலைகளில் எதிரியின் நகர்வுகளை தேசியதலைவருக்கு அறிவித்துவிட்டு தலைவரின் பதிலுக்காக தளபதிமார் காத்திருப்பர்.எதிரியின் எதிர்பாராத நடவடிக்கையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்என்று தேசிய தலைவரின் அறிவுறுத்தலின் படியே தளபதிமார் செயல்படுவினம்.அல்லது தலைவரது திட்டத்தை செயல்படுத்துவினம்.
களமுனைகளில் தளபதிமார் எதிர்பாராமல் எதிரி முன்னெடுக்கும் நகர்வுகளை துணிந்து எதிர்கொண்டு களநிலையை தலைவருக்கு அறிவித்துவிட்டு தலைவரின் பதிலுக்காக காத்திருக்காமல் தானே துணிந்து முடிவெடுப்பதிலும் எடுத்த முடிவுகளை வெற்றியில் முடிப்பதிலும் முடிசூடா மன்னன் சாதனை தளபதி,தன்னிகரற்ற மாவீரன் சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.
தாக்குதல் வெற்றியடைந்து விட்டபிறகு களமுனையில் தோன்றிய எதிபாராத இக்கட்டான நெருக்கடியை முறியடிக்க இப்படிதான் திட்டமிட்டு செயலாற்றி இருக்க வேண்டும் என்று தேசியதலைவர் அந்த நெருக்கடியை முறியடிக்க இப்படிதான் இந்த வழியில்தான் அதை எதிர்கொண்டு முறியடிக்கவேணும் என்று தலைவர் நினைப்பதை, தலைவர் அதை சொல்லாமலே லீமா அதை களத்தில் நடத்தி காட்டி இருப்பார்.
உடனடியாக திட்டமிடும் திறன் மட்டுமில்லை,ஆபத்தை மிக அருகில் எதிர்நோக்குவது மட்டுமில்லை,சண்டையை வழிநாடாத்தி கொண்டு கட்டளைகளை வழங்குவது மட்டுமல்ல,தாக்குதலணி சிதறிவிடாமல் ஒன்றிணைத்து அவர்களுக்கு மனச்சோர்வு வந்திடாதபடி வழிநாடாத்தும் திறமை மமட்டுமல்ல. தானும் அவர்களுடன் நேரடியாக சண்டைகளத்தில் இறங்கி விட்டால் போராளிகள் இறக்கை கட்டி பறப்பினம்.அப்போது மட்டும் அவர்களுக்கு அப்டீயொரு அசூர பலம் எங்கிருந்து வருமோ தெரியாது.
லீமா மாவீரன் மட்டுமல்ல மகத்தானவனும்..
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
பிரபாசெழியன்.