வரலாற்றில் அழியாப் பாடலும் அப்பாடலின் வரலாறும்…

“தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே”
என்ற துயிலுமில்லப் பாடலைக் கேட்டு கண்ணீர் மல்காத தமிழர்களே கிடையாது.நமது போராட்ட நினைவுகளைத்
தலைமுறைகள் கடந்தும் பல நூறு ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தி வைக்கக்கூடிய ஆற்றல் இப் பாடலுக்குண்டு.
“வேங்கைகளின் விடுதலை வேதங்கள் “என்ற ஒலிப்பேழைக்காக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகளில் உருவான இப் பாடலுக்கு இசைவடிவம், தாயகத்ததின் மூத்த இசையமைப்பாளர் இசைவாணர் கண்ணன் அவர்கள் ஆவார்.. இப் பாடலைத் தனது இசை ஆளுமை மிகு குரலால் உணர்வூட்டிப் பாடியவர் தேசத்தின் பாடகர் திரு. வர்ண இராமேஸ்வரன் ஆவார்.



1990ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பாடல், பின்னர் மாவீரர் வீரவணக்கப் பாடலாக மேதகு தேசியத் தலைவர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் நினைவுகளுடன் உயிரூட்டப்பட்ட இப்பாடல் இனிவரும் காலங்களில் நம் அடுத்த தலைமுறைகளாலும் பாடப்படும் என்பது திண்ணம்.
“எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்” என உறுதி கொள்ளும் இந்த, பல் நூற்றாண்டு பாடலின் வணக்கத்துக்குரிய நாயகர்களும், கலை ஆளுமைகளும் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமையே!…

