இனியாவது ஒரு விதிசெய்வோம்
இன்னும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்துவிட போகின்றோம் இந்த பூமிபந்தில் ?????
பிறந்தோம்
வளர்ந்தோம்
கண்டோம்
கதைத்தோம்
முடித்தோம்
பெற்றோம்
முதிர்ந்தோம்
மடிந்தோம்
இதுவா வாழ்க்கை
இதுவா கெளரவம்
இதுவா தன்மானம்
இதுவா வீரம்
வீட்டிலிருந்துகொண்டு வெந்த சோறு திண்பதா விடுதலை
இன்னும் எத்தனை #பிரபாகரன் பிறக்க வேண்டும் உனக்கு மானம் ரோசம் வர சூடு சொரனை வர
இந்த உலத்திற்க்கே அறத்தையும் வீரத்தையும் அன்பையும் தியாகத்தையும் அர்பணிப்பையும் போதித்த மறத்தமிழ்குடியில் பிறந்த மானத்தமிழன் நீ என்பதை மறந்து போனாயோ
விமானத்தை கண்டுபிடித்தவர் மரித்துவிட்டார்
கப்பலை கண்டுபிடித்தவர் மரித்துவிட்டார்
ரயிலை கண்டுபிடித்தவர் மரித்துவிட்டார்
மின்சாரத்தை கண்டுபிடித்தவர் மரித்துவிட்டார்
தொலைபேசியை கண்டுபிடித்தவர் மரித்துவிட்டார்
வானொலியை கண்டுபிடித்தவர் மரித்துவிட்டார்
எத்தனை எத்தனையோ
அறிஞர்கள்,ஞானிகள்,முனிவர்கள்,விடுதலை வீரர்கள்,சர்வாதிகாரிகள்,எத்தனை யோ அற்புதமான இலக்கிய இலக்கியங்களை படைத்தவர்கள்,மாமன்னர்கள்,பேரரசர்கள்,எல்லாம் மடிந்து மண்ணோடு மண்ணாக மறைந்து போய்விட்டார்கள்.
இவர்களுக்கு முன்னால் நாமெல்லாம் பெருங்காற்றில் பறக்கும் இலவம்பஞ்சு போல பறந்து போய்விடுவோம்.
நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழவேண்டாமா ?வரலாற்றில் நாமும் இடம்பிடிக்க வேண்டாமா ? நாம் எப்பேர்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் சாவு ஒருநாள் நம்மை சந்தித்தே தீரும்.சாவிலிருந்து யாரும் தப்பவே ஏலாது.எதற்குமே உதவாமல் யாருக்குமே பயன்படாமல் நாம் மடிந்து மண்ணுக்கு இறையாவதில் என்ன பயன் ?
விடுதலை யாகத்தில் தளபதிகள்,பொறுப்பாளர்கள்,போராளிகள்,பச்சிளம் குழந்தைகள்,பொதுமக்கள் என்று எத்தனை பேரை வாரி கொடுத்தோம்.
அவர்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகளா ? அல்லது சாவதற்காகவே குளோனிங் முறையில் உருவாக்கபட்ட மனிதர்களா ? பூவாய், பிஞ்சாய்,காயாய்,பழமாய் எத்தனை உயிர்பலி கொடுத்திருப்போம்.அவர்கள் அனைவரும் நம் உடன் பிறந்தவர்களே நம் குடும்ப உறுப்பினர்களே.இரத்த சொந்தங்களே.அவ்வளவு இழப்பும் விழலுக்கு இறைத்த நீராவதா ?
வருடா வருடம் சிலமணிதுளிகள் மட்டும் விளக்கேற்றி நினைவஞ்சலி செலுத்துவதோடு நம் கடமை முடிந்து விடுகின்றதா?
அவர்கள் இலட்சியம் என்னவாயிற்று ?
அவர்கள் கண்ட கனவு என்னவாயிற்று
அவர்கள் கட்டி காத்த தமிழீழ தேசம் என்னவாயிற்று ?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை காண்பது எப்போது ?
பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ
கோரிக்கைகளை முன் வைப்பது மூலமாகவோ,உண்ணாவிரதம்,கவனயீர்பு,பேரணிகள் மூலமாக சிங்கள பேரினவாத அரசு நமக்கான எந்தவொரு நிரந்தர தீர்வையும் தந்துவிடப்போவதில்லை.அப்படி நம்புவதற்க்கு நானும் நீயும் முட்டாளுமில்லை.எப்போதுதான் தலை நிமிர போகின்றோம்? செய்த சாதனைகளையே கதைத்துக் கொண்டிருந்தால் மேலும் நாம் சாதிப்பது எப்போது ?
உயிர் ஒருமுறைதான் போகும் அது இலட்சியத்திற்காக போகட்டும்.இலட்சியத்திற்காக சாக துணி இந்த உலகில் மற்ற ஏதுவும் மிகசாதாரணமாக தெறியும்.
தலைவன் வழியில் பயணிப்போம்
இலக்கை அடைவோம் தனித் தமிழீழ தனியரசை நிறுவுவோம்.நமக்கு அடுத்த சந்ததிகளையாவது அகதிகளாகாமல் தடுப்போம்.
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல பண்படுத்தவே.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-பிரபாசெழியன்.