வலிகளை தாங்கியவர்கள் இன்றும் வலிகளுடனே வாழ்கின்றார்கள்!

நவம்பர் 03 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் (பன்னாட்டு ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஆம் திகதியை அனுசரிக்கின்றது.

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.

உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.

பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்தவகையில் இலங்கைத்தீவின் வடக்கே போர் தந்துவிட்டு சென்ற வடுக்களுடன் இன்றும் வாடிக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அதிகளவாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே காணப்படுகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரம்படி 2330 மாற்றுத்திறனாளிகள் காணப்பட்டாலும் மிகவும் அதிகளவானவர்கள் இன்றும் போரின்வடுவினையும் வலியினையும் சுமந்த உடல் ஊடனமுற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

போர் திண்ட மண்ணில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் முழுமைபெறாத நிலையில் உடல் ஊனமுற்றவர்களின் வாழ்வாராங்களை உயர்த்த வேண்டிய நிலை காணப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளார்கள்.

பல அமைப்புக்கள்,சங்கங்களை நிறுவி அதன் ஊடான உதவிகளை பெற்றாலும் அவற்றின்உதவிகள் அவர்களின் குடும்ப வாழ்விற்கு திருப்தி;யானதாக இல்லை இன்னும் பலர் எதுவித உதவிகளும் அற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றார்கள்.

அதிகளவான மாற்றுத்திறனாளிகளை கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு காணப்பட்டாலும் அங்குள்ள அரசதிணைக்களங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று வசதிகளை ஏற்படுத்த தவறிவிட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீங்கள் எங்கு சென்று பார்த்தாலும் ஊன்றுகோலுடன் ஒருவர் ஆவது உங்கள் கண்ணிற்கு புலப்படுவார்கள் இவ்வாறான நிலையில்தான் முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.

மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் குடும்பத் தலைவனாகவும்,குடும்ப தலைவியாகவும், குடும்பத்தில் ஒருத்தராகவும் மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றார்கள். இதில் முன்னாள் போராளிகளும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

சுயமாக தொழில்செய்தும் இயன்ற வேலைக்கு சென்றும் கூலி வேலைக்கு சென்றும் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் நிலைக்குதள்ளப்பட்டுள்ள நிலையில் இன்றும் வாழ்ந்துவரும் இவர்கள் மத்தியில் தங்களுக்கான தேவைகளின் மாற்றுவழிகளை அங்காலாய்த்து காத்து நிக்கின்றார்கள்.

ஒரு மலசலகூட வசதிகூட இல்லாத நிலையில் றபர்கதிரையினை நடுவில் வெட்டிவிட்டே மலம் கழிக்கும் நிலையில் வாழ்ந்துவருகின்றார்கள்.

போர் இவர்களைவிட்டுவைக்கவில்லை பலர் உடல்களில் அவையங்களை இழந்த நிலையில் அவயங்கள் இயங்கமுடியாத நிலையில் வாழ்ந்துவரும் உடல் ஊனமுற்றவர்கள் அரசாங்கத்தினால் மாற்றுத்திறனாளிகள் என உள்வாங்கப்படவில்லை குறிப்பாக முள்ளந்தட்டு வடத்தில் துப்பாக்கி சன்னங்களையும்,சிறுகுடல் பெருங்குடல்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் உடலின் பாகங்களில் வெடிச்திறல்கள் பதிந்த நிலையில் அவையங்கள் முழுமையா இயங்க முடியாதநிலையில் வாழ்ந்துவரும் இவர்களால் வாழ்வாதாரத்திற்கான வேலையினை செய்துகொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது என்றும் தங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கள இழப்பினை வெளியில் காட்டமுடியாமல் தவித்து வருகின்றார்கள்.

இவர்களின் சரியான பதிவுகளை அரச அதிகாரிகள் காட்டவில்லை என கவலையுடன் மாற்றுத்திறனாளி ஒருவர் தெரிவித்துள்ள அதேவேளை

இவர்களும் மாற்றுத்திறனாளிகள்தான் என அங்கி;கரிக்கப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றார்கள் கால்களை இழந்தவர்கள் அதிகளவாக வாழ்ந்து வந்தாலும் இவர்கள் தங்கள் பொய் கால்கள் பாதிக்கப்பட்டால் அதனை மாற்றி பெறக்கூட வழியின்றி தவித்து வருகின்றார்கள் நாளாந்த கூலிவேலை செய்து தனது குடும்பத்தினை கொண்செல்லும் குடும்ப தலைவர்கள் பலர் அவர்களின் மனித வலுவிற்கு அப்பால் ஏனையவர்களைபோல் பணிசெய்தால்தான் தங்களுக்கான ஊதியம் கிடைக்கும் என்ற மன நம்பிக்கையில் தங்கள் உடலை வருத்தி இரத்தத்தை வியர்வையாக்கி பணத்தினை தேடுகின்றார்கள்.

இவ்வாறானவர்கள் அதிகளவில் வாழந்து வந்தாலும் தற்போது ஏற்பட்டுள்ள விபத்துக்களால் பலர் அவயங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றார்கள் இவர்களின் எதிர்காலம் கேள்விககுறியாகி வருகின்றது குறிப்பா வடக்கில் அதிகரித்து செல்லும் விபத்து காரணமாக அதிகளவானவர்கள் தங்கள் அவயங்களை இழக்க நேரிடுகின்றன. இதுவும் ஒரு திட்டமிட்ட அழிப்பின் வடிவமாக காணப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட நிலையிலும் மனதளவில் சமூக அங்கிகாரத்தினை கோரியுமஎவ்வாறாயினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் உடலால் ; மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றார்கள் இவர்களின் தவிப்பும், எதிர்பார்ப்பும், என்று நிறைவேறும் என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் இவர்களின் முகத்தில் புன்னகையினை காட்ட ஒன்றிணைந்து உழைக்கவேண்டிய கடமை அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.

(அந்தணன்)