வல்வெட்டித்துறை இது ஊரல்ல.. !
உணர்ச்சியின் உச்சம் !

வல்வெட்டித்துறை இது ஊரல்ல.. !
உணர்ச்சியின் உச்சம் !இது மண்ணல்ல…!
மான ரோசத்தின் மறுபெயர் !!

ஊறணி” தொடங்கி.!
ஊரிக்காடு” வரைக்கும்.!
ஈழம்” மட்டுமே பேச்சு !வ
ல்வெட்டி” தொடங்கி.!கம்பர்மலை” வரைக்கும்.!
வரலாறாய் ஆகிப் போச்சு !!!

1930 களிலேயே .!அமெரிக்காக் கண்டம் நோக்கி.!
அன்னபூரணி” கப்பல் அனுப்பிய.!
ஆளுமை கொண்டவர் பிறந்த இடமிது !!!
குட்டிமணி, கேணல் கிட்டு,.!
ஆழிக்குமரன் ஆனந்தன்,செல்வச்சன்னதி முருகன்,
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்…!

அமெரிக்க அதிபர் தொட்டு.!
அன்றாடக் கூலி வரைக்கும்.!
ஆச்சரியத்துடன் கூகிளில் தேடிய அற்புத பூமியிது !!!

ஏட்டில் எழுதப்படாத .!
எட்டாவது அதிசயம்.!
இந்த மண்ணில் தான் நிகழ்ந்தது !!!
ஆம்…..!
உலகத் தமிழர்களின் !உண்மையான “குலசாமி”!
இங்கு தான் பிறந்தான் !!!
உன்னையும் , உன் குடும்பத்தையும்.!
வெளிநாடு அனுப்பி வைத்துவிட்டு..!
தன்னையும் , தன் குடும்பத்தையும்.!
நாட்டுக்குக் கொடையாக்கிய நாயகன் அவன் !!!

புழுப்புடித்த மாவும் .!
புழுங்கிப்போன அரிசியும்.!
துருப்பிடித்த பொருட்களும்.!
துரோகமும் கண்டும்…..!
ஒதுங்கி வாழ்ந்த ஓர் இனத்தை.!
தட்டி எழுப்பிய தன்மானத் தமிழன் அவன்…!!!
இது மண்ணல்ல…மரியாதை !!!

நீ பிறவிப்பயன் அடைய வேண்டுமா.!
சிங்களவர் பலரை பின்பற்றினால் போதும்..!
ஆம்,அவர்கள் இந்த ஊருக்கு வந்து.!
ஒருத்தன் வீட்டு மண்ணெடுத்து.!
நெற்றியில் பூசிச் செல்கின்றார்கள்…!
நீயும் செய் மோட்சம் வரும் !!!!

-படித்ததில் பிடித்தது…… .

(www.eelamalar.com)