விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்..!
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இவ்வாறான அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 13 தனிப்பட்ட நபர்களும் 22 அமைப்புகளும் அடங்கும். 2006ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் அமைப்பும், 2003ஆம் ஆண்டில் ஹாமஸ் அமைப்பும் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியப் பேரவைக்கு ஐரோப்பிய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் ஐரோப்பாவில் அமுலில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சொத்துமுடக்கமும் நீங்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதால் இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வாதம் அடிப்படையற்றது என்றும் தனது தீர்ப்பில் ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.