விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகிலேயே தலைசிறந்த வீரர்

பிரபாகரனின் ஆயுத போராட்டத்தினால் அடைய முடியாத ஈழத்துக்கான இலக்கை புதிய அரசியல் அமைப்பின் மூலம் அடையவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் பின்னணியில் அமெரிக்காவும்,இந்தியாவும் உள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். பிரபாகரனை நியாயப்படுத்தி பொதுவிடத்தில் பேச இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு தைரியம் உள்ளதை எண்ணி ஆச்சர்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகிலேயே தலைசிறந்த வீரர் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் சிங்கள அரசியல் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.