வரும்படை புலிப்படை….!

நெருப்பிலே நீந்தி நெடுந்தூரம்
சென்ற படையொன்று
வியப்பிலே ஆழ்த்தி நந்திக்கடல் நீந்த
வரும்படை புலிப்படை..!

புலிக்கொடிப் பறக்கவிட்டு
நாற்புறமும் தெறிக்கவிட்டு சிங்கள இராணுவத்தைச் சில்லு சில்லாய் சிதறவிட
வரும்படை புலிப்படை…!

புத்தி புகட்டிவிட புத்தமதப் பித்தொழிய
வித்தகன் வழிநின்று வீறுநடைபோட்டே
சக்தியைத் திரட்டிக்கொண்டு நாள்பார்த்து
வரும்படை புலிப்படை…!

தலைவன் தந்த பயிற்சியிலே
தளபதிமார் முயற்சியிலே..
தமிழீழ விடுதலையை எட்டிவிட
வரும்படை புலிப்படை..!

இனம் கொன்ற கூட்டத்திற்கு
பிணம்காட்ட வேண்டுமென்று
சிங்களவெறி பிடித்த நரிக்கூட்டம்தனைக் கொல்ல
வரும்படை புலிப்படை…!

கரும்புலி வீரருண்டு தரைப்படை மெத்தவுண்டு
தமிழின வீரமோடு பகைகொண்ட நெஞ்சோடு
பழிதீர்க்க நாள் கண்டு..
வரும்படை புலிப்படை..!

கதறி அழுவதற்குக் காத்திருப்பாய் எம்பகையே
சீறிப்பாயும் புலிகள் கண்டு
சிதறிச்சாவாய் எம்பகையே ..இலக்கு ஒன்றென்றே
வரும்படை புலிப்படை..!

தமிழீழம் விடுவிக்க
வரும்படை புலிப்படை…!
தலைவனோடும் தர்மத்தோடும்
வரும்படை புலிப்படை..!

– திருநாவுக்கரசன்