வீரம் செறிந்த மண்ணும் வீரம் செறிந்த போராளிகளும்
1987ஆம் ஆண்டு அமைதிப்படை என்பெயரில் தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை அக்டோபர் மாதம் ஆரம்பித்து.அதன் முதல் நடவடிக்கையாக தலைவரை ஒழித்துக்கட்டவும்,விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிடுவதற்காகவும் செயற்பட்டது.அக்காலகட்டத்தில் மிக குறைந்த அளவில் போராளிகள் இருந்தாலும்கூட அவர்களது ஆக்கிரமிப்புப்படைக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தினை விடுதலைப்புலிகள் நடத்தினார்கள். அப்போரின்போது உயிருடன் பிடிபட்ட இந்தியச் சிப்பாய்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைத்தார்கள்.இப்படங்களில் உயிருடன் பிடிபட்ட இந்தியச் சிப்பாயை கையளித்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.புலிகளின் தரப்பில் மேஜர் விசு,கஸ்ட்ரோ மற்றும் போராளிகளை காணப்படுகின்றனர்.