4

வண்ண வண்ண கோலமிட்டு வாசலெங்கும் பொங்கலிட்டு..

உலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு
நீ மட்டுமே – தமிழர்களை தலைவனாக்க
தலைவனானாய்;

உலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக்
கொண்ட போது – நீ மட்டுமே – தமிழனுக்கும் தனி
நாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய்;

புலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே
தொப்புள் கொடி உறவறுத்து – தமிழருக்கு
அண்ணனான அண்ணலே;

வாழ்வது ஒருமுறை; வீழ்வதும் ஒருமுறை
இரண்டில் எதுவாயினும் ஈழத்திற்கேயென
போர்புரிந்த மாவீரனே;

செய்திகளுக்கு தீனி போட்டு..
வீடுகளுக்கு புகழில் வெள்ளையடித்து..
அதிகார வர்க்கத்தில் –
எதையும் அசைத்து விடுவதாய் எண்ணி வாழும்
பல உலகமகா தலைவர்களை தாண்டி
விடுதலையென்னும் ஒற்றை சொல்லுக்காய்
வாழ்வின் அரை தூரம் கடந்து விட்ட மாசிலா மன்னனே;

நீ பிறந்தாய் –
தமிழரின் தனி அடையாளத்தை
உலகம் தெரிந்துக் கொண்டது!

நீ பிறந்தாய் –
தமிழரின் வீரம் இதுவென்று கண்டு
உலகமே அதிர்ந்து நின்றது!

நீ பிறந்தாய் –
சிங்களனின் திமிரெங்கோ
தலைகவிழ்ந்து வீழ்ந்தது!

நீ பிறந்தாய் –
ஈழ தேசம் ஒட்டுமொத்த தமிழரின்
கனவு தேசம் ஆனது!

இதோ.. கனவு தேசம் கைகூடும்
நாளின்னும் வெகு தொலைவிலில்லை..

எங்களின் ஒற்றை தலைவனே..
கனவு தேசம் இனி எங்களின் –
லட்சிய தேசமென முழங்குவோம்;

இந்த லட்சிய தேசம் வெல்லும் நாளில்
உன் பிறந்த தினம் தானே – எங்களின்
முடிசூடும் ஈழ திருநாளாகும்!

வீர எழுச்சி மிகு அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

(www.eelamalar.com)