வீழ்ந்துவிட்டோம் என்பது உண்மை தான்!ஆனால் ஓய்ந்துவிட்டோம் என்பது உண்மை அல்ல!

சாவுகள் எமக்கு புதிதல்ல..
சரித்திரம் படைக்கும்
இனம்..
சாவினை கண்டு
அஞ்சுவதில்லை!

அவர்கள் எம்மை
சாகடித்ததாக
கனவு காணலாம்…

ஆனால்
நாம் சாகமாட்டோம்!

வீழ்ந்துவிட்டோம்
என்பது உண்மை தான்!

ஆனால் ஓய்ந்துவிட்டோம்
என்பது உண்மை அல்ல!

எங்கள் விரல்கள்
விழுதுகளானதால்
வீழ்ந்த இடத்தில் இருந்து
மீண்டும் விழுதூன்றி எழுவோம்!

உண்மை எம்மோடு
உணர்வும் எம்மோடு
உயிர்த்தெழ ஏது தடை?

வலிமை கொண்ட
தோழமை கரங்கள்
இணையட்டும்!

எழுவோம்!
வெல்வோம்!

செந்தமிழினி பிரபாகரன்

(www.eelamalar.com)