வெள்ளைமாவடிப் பிள்ளையார் ஆலய தேர்திருவிழா
ஈழத்துப் புகழ்பூத்த தென்மராட்சி உறை மீசாலை திருநீலகண்ட வெள்ளைமாவடிப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா இன்றைய தினம் 28.08.15 காலையில் சிறப்பான இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி தூக்குக் காவடி, பாற்காவடி, கற்பூரச்சட்டி மற்றும் அங்கப் பிரதட்சணை போன்ற நேர்த்திகளைச் செலுத்தி வர விநாயப் பெருமான் தேரிலேறி வீதியுலாவந்தார்.
தேர்த் திருவிழாவின்போது திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையாருடைய அற்புதங்களையும், அருட்சிறப்புக்களையும் வெளிப்படுத்தும் ´மாவடி நாதம்´ எனும் பக்திப் பாமாலை இறுவட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல் துறை பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் பாடல்கள் தென்மராட்சிப் பிரதேச ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டு, இசை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.