1991 ஆம் ஆண்டு செஞ்சோலையில் புலிகளின் தலைவர்
போர் நடந்து கொண்டிருந்த இறுக்கமான நிலையில் யாழ்ப்பாணத்தில் 91 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போதும்…. ஒவ்வொரு இடப்பெயர்வு மத்தியிலும் தேசியத் தலைவர் அவர்களால் பெருவிருட்சமாகவே கட்டிக் பாதுகாக்கப்பட்டது செஞ்சோலை இல்லம்.
முதலில் யாழ்ப்பாணத்தில் சில இடங்களிலும்… 95 ஆண்டு இடப்பெயர்வுக்குப் பின் தற்காலிகமாக கிளிநொச்சி மாவட்டம் கனாகாம்பிகை குளம் (திருவையாறை அண்டிய பிரதேசம்) என்ற இடத்திலும்…. கிளிநொச்சி நகரம், இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பின் வடகாடு மல்லாவியிலும்…. பின்பு வள்ளிபுனத்திலும்…. பின்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணப்பாலையிலும் இறுதியில் கைவேலியிலும், “செஞ்சோலை இல்லம்” ஆனாதரவான ஈழக் குழந்தைகளுக்கு தாயாகவே இருந்து வந்துள்ளது.
தேசியத் தலைவர் அவர்களின் துணைவியாரோடு யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்று, அவருடனேயே தமிழகம் வந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட மூத்த பெண் உறுப்பினரான செல்வி ஜனனி அக்கா அவர்களே…. செஞ்சோலை இல்லத்தின் தாயாக இறுதி வரை இருந்தார். ஜனனி அக்கா அவர்களை செஞ்சோலை குழந்தைகள் அனைவரும் “பெரியம்மா” என்றே அன்போடு அழைத்து வந்தார்கள். தேசியத் தலைவர் அவர்களையும் “தலைவர் மாமா” என்றே அழைக்கும் செஞ்சோலைக் குழந்தைகள், தேசியத் தலைவர் அவர்களின் துணைவியாரை “மாமி” என்றே உரிமையோடு இறுதிவரை அழைத்து வந்தனர்.
செஞ்சோலை குழந்தைகளுக்கு தாயான ஜனனி அக்கா அவர்களும் இறுதிவரை திருமணம் செய்யாமலே செஞ்சோலை குழந்தைகளுடனேயே பெரும் தாயாக வாழ்ந்து வந்தார். இவ்வாறு செஞ்சோலை நினைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்…. பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் செஞ்சோலை உருவாக்கப்பட்ட வரலாறை முழுமையாக பதிவு செய்கிறேன், அதுவரை காத்திருக்கவும்.
வல்வை அகலினியன்