இவர்கள் எங்கே? – பிரான்சிஸ் கரிசன்!

இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த சில போராளிகளின் படங்களும், அவர்களுக்கு என்ன நடந்ததெனவும் கேள்வியெழுப்பி பிரபல பத்திரிகையாளர் பிரான்சிஸ் கரிசன் தனது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தவில்லையென சிறிலங்காஅரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்ற நிலையில், கொத்துக்குண்டு ஆகாயத்தில் வெடித்துச் சிதறும் புகைப்படம்ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் நாள்; இவர்கள் எங்கே?

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் எடுக்கப்பட்ட புகைப்படம். இராணுவத்திடம் சரணடைந்த இவர்கள் எங்கே?

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் நாள் எடுக்கப்பட்ட புகைப்படம். இராணுவத்திடம் சரணடைந்த இவர்கள் எங்கே?

2009ஆம் ஆண்டு மே மாதம் முதலாம்நாள் முள்ளிவாய்க்கால் வானத்தில் கொத்துக்குண்டின் வெடிப்பு!