இறப்பில்லா வாழ்வின் எழிலே!-(05)
August 9th, 2018 | செய்திகள்
இறப்பில்லா வாழ்வின் எழிலே!-(05)
சிறப்பில்லாச் செய்கைதனைச் சீனரும் செய்வார்
இறப்பில்லா வாழ்வின் எழிலே! –உறப்பில்லா*ப்
பாகிசுத் தானியரும் பாழ்கருவி* தந்திடுவார்
ஏகியெமைக் கொல்வார் இவர்! (41)
-உறப்பில்லாத ...
மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!(04)
August 9th, 2018 | செய்திகள்
மன்னவனே! எங்கள் மறவர் படைத்தலைவா!(04)
மாணார்*அச் சிங்களர் மாய்த்தாரெம் மக்களை
வீணாய் அமைதிவழி வேண்டாமல்; –மாணாரைச்
சாய்க்கத் துமுக்கி*யைச் சார்ந்துதன் கையேந்தி
மாய்க்கப் பிறப்பெடுத்த மன்! ...
ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!-(03)
August 8th, 2018 | செய்திகள்
ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!-(03)
இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை
முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*
அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!
தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! ...
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?-(02)
August 8th, 2018 | செய்திகள்
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?-(02)
பாரில் நினைப்போல் படைநடத்தக் கற்றவர்யார்?
போரில் புகழ்நாட்டும் பொன்முடியே! –காரில்*
மின்போலும் ஊடுருவி வெற்றிக் கனிபறிக்க
உன்போலும் ஆமோ உரை! ...
“காவலாய் வாய்த்த கதிர்க்கையன்”(01)
August 8th, 2018 | செய்திகள்
"காவலாய் வாய்த்த கதிர்க்கையன்"(01)
காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள் பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! ...
தேசியத் தலைவரை சூரியக் கடவுளாக சித்தரித்து அகரம் அமுதனினால் பாடப்பட்ட பிரபாகரன் அந்தாதி
August 5th, 2018 | செய்திகள்
தேசியத் தலைவரை சூரியக் கடவுளாக சித்தரித்து அகரம் அமுதனினால் பாடப்பட்ட பிரபாகரன் அந்தாதி
பொதுவாக கடவுளர்களின் அருள் கடாட்சங்களை விதந்து புலவர்கள் ...